வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 23ஆவது லீக் போட்டி டவுன்டனில் நடைபெற்றது.இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 322 ரன்கள் இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் சவுமியா சர்கார், தமிம் இக்பால் ஆகியோர் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்த நிலையில், சவுமியா சர்கார் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் உடன் சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினார். ஒருபக்கம் தமிம் இக்பால், முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், வங்கதேச அணி 19 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து, லிட்டான் தாஸ், ஷகிப் அல் ஹசன் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை எடுத்தது.