கந்தசஷ்டி கவசம் குறித்து விளக்க கருத்து தெரிவித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த யூடியூப் சேனலை ரத்து செய்ய வேண்டும், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தன.
கந்தசஷ்டி கவசம்: மணலில் வேல் வடிவமைத்து விழிப்புணர்வு - Awareness protest
கோயம்புத்தூர்: கந்தசஷ்டி கவசம் பாடலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவர், மணலில் முருகன் வேல் வடிவமைத்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.
Awareness by designing Lord Murugan weapon in sand
இந்நிலையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவர் கந்தசஷ்டி கவசத்தை ஆதரித்து வெற்றி வேல், வீர வேல் என்னும் தலைப்பில் முருகனின் கந்தவேலை மணலில் வடிவமைத்துள்ளார். சுமார் மூன்று அடி உயரத்தில் கந்தவேலு வடிவமைத்தும் அதன் கீழ் முகக் கவசத்தை வடிவமைத்தும் காட்டியுள்ளார்.