தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கூட்டி கழிச்சுப் பாரு கணக்கு சரியா இருக்கும் - வார்னே - உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் வரலாற்றை பார்த்தால், இம்முறை அவர்கள் தான் உலகக் கோப்பையை வெல்வார்கள் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

கூட்டி கழிச்சுப் பாரு கணக்கு சரியா இருக்கும் - வார்னே

By

Published : May 28, 2019, 11:19 PM IST

இது குறித்து அவர் கூறுகையில், "ஓராண்டுக்கு முன், ஆஸ்திரேலிய அணி சற்று மோசமான ஆட்டத்தையே வெளிபடுத்தியது. இதனால், ஆஸ்திரேலிய அணியின் கதை முடிந்துவிட்டது என சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் ஆஸ்திரேலியா அணி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று பழைய ஆஸ்திரேலிய அணியாக திகழ்கிறது.

தற்போது நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்ல இந்தியா, இங்கிலாந்து அணிகள் வேண்டுமானாலும் ஃபேவரைட் அணிகளாக இருக்கலாம். ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் வரலாற்றை எடுத்தப் பார்த்தால் அவர்களது ஆதிக்கம் நன்கு புரியும்.

இதுவரை நடைபெற்ற 11 தொடர்களில் ஆஸ்திரேலிய அணி ஏழுமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில், ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. குறிப்பாக, கடந்த ஆறு தொடர்களில் ஆஸ்திரேலிய அணி நான்கு முறை சாம்பியன் பட்டம் மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல், சரியான நேரத்தில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தற்போது ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளதால், ஆஸ்திரேலிய அணி இம்முறை உலகக் கோப்பை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக அமைந்துள்ளது" என்றார்.

இங்கிலாந்தில், நாளை மறுநாள் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இதில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details