தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு கை கொடுக்கும் அமுல்! - இங்கிலாந்து

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அமுல் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய உள்ளது.

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு கை கொடுக்கும் அமுல்!

By

Published : May 8, 2019, 8:38 AM IST

12ஆவது உலகக் கோப்பை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதற்கான, அனைத்து அணிகளின் வீரர்களின் பெயர் கடந்த மாதமே அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய ஸ்பான்சராக இருப்பதற்கு இந்தியாவின் பால் பொருட்கள் சார்ந்த முன்னணி நிறுவனமான அமுல் முன்வந்துள்ளது. இது குறித்து, அமுல் நிர்வாகத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.சோதி கூறுகையில்,

'கிரிக்கெட்டில் தற்போது ஆப்கானிஸ்தான் அணி வேகமாக வளர்ந்துவருகிறது. நிச்சயம் இந்த அணி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில், மற்ற அணிகளுக்கு கடும் சவாலை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றார்.

இதுபோன்று அமுல் நிறுவனம் நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்பான்சராக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details