இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள், அனைத்து நிறுவனங்களும் இயங்க முடியாமல் தடைபட்டு நிற்பது அறிந்ததே. இந்தக் கொடிய நோயிலிருந்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மக்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
மக்களின் எந்தத் தொழில்களும் முறையாக நடக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஏழை, நடுத்தர நிலையில் உள்ள மாணவர்கள் பலர் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் படித்துவருகிறார்கள். இதில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரி கட்டணங்களை கட்ட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
எனவே, அவர்களுக்கு பணம் செலுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்தக் கடினமான சூழ்நிலையில் கல்லூரிகள் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் அவர்கள் கட்ட வேண்டிய கட்டண தொகைகளை கட்ட ஆறு மாதம் கால அவகாசம் கல்லூரி நிர்வாகங்கள் நீட்டித்து வழங்க வேண்டும்.