தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கடலில் மாயமான 12ஆம் வகுப்பு மாணவனின் உடல் மீட்பு! - 12 ஆம் வகுப்பு மாணவனின் உடல் மீட்பு

ராமநாதபுரம் : வாலிநோக்கம் கடலில் குளிக்கச் சென்று மாயமான 12ஆம் வகுப்பு மாணவனின் உடல் கரை ஒதுங்கியது.

A student Dead Body Rescued In Valinokkam Beach
A student Dead Body Rescued In Valinokkam Beach

By

Published : Aug 31, 2020, 9:29 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த கந்தசாமி, இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நிதீஷ்குமரன், முதுகுளத்தூரைச் சேர்ந்த தனது இரு நண்பர்களுடன் கடந்த 29ஆம் தேதி மாலை, வாலிநோக்கம் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

அப்போது மூவரும் கடலில் குளிக்கத் தொடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் நிதீஷ் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். அன்று தொடங்கி கடலோரக் காவல் துறையினரும் மீனவர்களும் நிதீஷைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து, தலைமைக் காவலர் கந்தசாமியின் புகாரின்பேரில், தேவிப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கடலில் தேடி வந்தனர். இந்நிலையில், நிதீ்ஷின் உடல் இன்று (ஆக. 31) கீழமுந்தல் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இதையடுத்து, காவல் துறையினர் நிதீஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details