தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்றுவந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது - தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்றவந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: கலசபாக்கம் அருகே தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரைக் காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுப்பட்டுவந்த நபர் கைது
கள்ளச்சாராயம் விற்றவர் கைது

By

Published : Jun 9, 2020, 10:15 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் பாரதிராஜா (29). இவர் மீது கள்ளச்சாராயம் விற்பனைக்காக பலமுறை வழக்குப்பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, பாரதிராஜாவை போளூர் மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பாரதிராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 44 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details