தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் வலம் வந்த ஆசாமி கைது! - scythe

திருச்சி:மணப்பாறை பேருந்து நிலையத்தில் கையில் அரிவாளுடன் வலம் வந்த கட்டடத் தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 A Man was arrested at the bus stand with a scythe
A Man was arrested at the bus stand with a scythe

By

Published : Sep 27, 2020, 10:02 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை மதுரை சாலையில் உள்ள பயணிகள் விடுதியில் திண்டுக்கல் மாவட்டம், கோட்டூர் புரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சண்முகவேல் (34) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி தினமும் திருச்சிக்கு கொத்தனார் வேலைக்கா சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென சண்முகவேல் கையில் அரிவாளுடன் மணப்பாறை பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலைகளில் வலம் வந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மணப்பாறை காவல் துறையினர், சண்முகவேலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, வாகன ஓட்டிகள் உதவியுடன் காவல்துறையினர் சண்முகவேலை பிடிக்க முயற்சி செய்தபோது ஓட்டுநர் கண்ணன் என்பவரின் கையில் அரிவாள் பட்டு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், சண்முகவேலை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details