தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் பெரிய தெரு பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் இருந்து நேற்று இரவு ஒரு இளைஞர் வெளியில் வந்துள்ளார். அப்போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அந்த இளைஞரை அழைத்தனர். இதைக் கண்டதும் அந்த இளைஞர் உடனடியாக அங்கிருந்து ஓட ஆரம்பித்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் ஏடிஎம்மில் சென்று பார்த்தபோது ஏடிஎம்மில் கடப்பாரை ஒன்று கிடந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் அந்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கடப்பாரை மூலம் ஏடிஎம் மிஷினை உடைக்க முயன்று அது முடியாமல் போகவே அதை போட்டுவிட்டு அந்த இளைஞர் வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.