தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

டிராக்டர் சக்கரம் ஏறி உயிரிழந்த சிறுமி - சிறுமி உயிரிழப்பு

தருமபுரி: குடும்ப வறுமையின் காரணமாக செங்கல் சூளையில் வேலை செய்த சிறுமி டிராக்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Small girl died
Small girl died

By

Published : Jun 2, 2020, 9:26 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நளப்பநாயக்கன அள்ளி கிராமத்தில் செங்கல் சூளைகள் உள்ளன. பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் அவரது மனைவி சின்ன பாப்பா இருவரும் தனது குழந்தைகளுடன் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று( ஜூன் 2) காலை பனைகுளம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவர் டிராக்டரில் செங்கல்களை ஏற்றிக்கொண்டு நலப்பனநாயக்கன அள்ளி பகுதியிலிருந்து அதியமான் கோட்டை பகுதிக்கு பாப்பாரப்பட்டி வழியாக ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

செங்கல் இறக்க துணையாக முருகன், அவரின் மகள் திவ்யா இன்னும் சில பணியாளர்களுடன் டிராக்டர் சென்று கொண்டிருந்தது.அப்போது திவ்யாவின் தலையில் கட்டியிருந்த துண்டு கீழே விழுந்ததால் துண்டை எடுக்க வேண்டும் என டிராக்டர் ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த டிராக்டர் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தும் போது நிலைதடுமாறி திவ்யா சாலையில் கீழே விழுந்துள்ளார். இதில் டிராக்டரின் பின் சக்கரம் மோதி பள்ளி மாணவி திவ்யா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Small girl died

அதன் பின்னர் இச்சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details