நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலக்கம்பை அருகே உள்ள தைமலை மற்றும் தூதூர்மட்டம் பகுதியில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர்கள் கோவையில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அந்தப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
ஒன்பது காவலர்களுக்கு கரோனா அறிகுறி - காவல் நிலையத்திற்குச் சீல் - குன்னூரில் காவலர்களுக்கு கரோனா தோற்று
நீலகிரி: குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் ஒன்பது காவலர்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொலக்கம்பை காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒன்பது காவலர்களுக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளன. கொலக்கம்பை காவல் நிலையம் பூட்டி சீல் வைக்கப்பட்டு, கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.