தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கொடநாடு கொலை வழக்கு: 8 பேர் ஆஜர்! - கொடநாடு கொலை

நீலகிரி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நேற்றைய விசாரணைக்கு சாயான், வாளையாறு மனோஜ் உள்பட 8 பேர் ஆஜராகினர்.

8 people appear in court in Kodanadu murder case
8 people appear in court in Kodanadu murder case

By

Published : Sep 16, 2020, 2:16 AM IST

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017‌ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

அப்போது, இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார். இந்த வழக்கு விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து கொடநாடு வழக்கு சூடு பிடிக்க தொடங்கியது. இன்றைய விசாரணைக்கு சயான் உள்பட 10 பேர் கண்டிப்பாக ஆஜராகுமாறு நீதிபதி கடந்த விசாரணையின் போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், நேற்றைய விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ், மனோஜ்சாமி, உதயகுமார், ஜம்சீர்அலி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி உள்ளிட்ட 7 பேர் ஆஜர்படுத்தபட்டனர்.

தலைமறைவாக இருந்த சந்தோஷ் சாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார். திபு, சதீசன் ஆகிய. 2 பேர் ஆஜராகவில்லை. இதனையடுத்து சாட்சி விசாரணை தொடங்கியது.

அப்போது சம்பவத்தன்று இவர்கள் உதகையில் தங்கிய தனியார் விடுதி உரிமையாளர் உள்பட இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்றது. இதனிடையே வழக்கு விசாரணை 18ஆம் தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details