தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இந்தியை நிராகரிக்கும் உத்தரப்பிரதேச மாணவர்கள்! - இந்தி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமார் ஏழு லட்சம் பேர் இந்தி மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.

உத்திரபிரதேசம் மாணவர்கள்
உத்திரபிரதேசம் மாணவர்கள்

By

Published : Jun 29, 2020, 1:57 PM IST

நாடு முழுவதும் இந்தி மொழியைக் கொண்டு சேர்க்க அம்மொழி ஆர்வலர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களில் இந்தி மொழியைக் கற்பிப்பதில் மாணவர்களின் பெற்றோரும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கு நேர்மாறாக, ’இந்தி ஹாட் லேண்ட்’ எனப்படும் உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்தி மொழிப்பாடத்தில் தோல்வி அடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், சுமார் 7.97 லட்ச மாணவர்கள் இந்தி மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.

அதேபோல் நடுநிலைப் பள்ளிகளில் பயின்று வரும் 5.28 லட்சம் மாணவர்களில், 2.60 லட்சம் மாணவர்கள் இந்தி மொழிப்பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

இது குறித்து பேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர், "பல குழந்தைகளுக்கு 'ஆத்மா விஷ்வாஸ்' போன்ற எளிய சொற்களின் அர்த்தமே தெரியவில்லை. தவறாக 'நம்பிக்கை' என்று எழுதுகிறார்கள். அதேபோல் 'யாத்திரைக்கு' 'கஷ்டப்படுகிறார்கள்' என்று எழுதினார்கள். சொற்களை குழப்பிக் கோண்டு, வேறு சொற்களாக புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களின் மொழி அறிவின் அளவைப் பிரதிபலிக்கிறது .

மாணவர்கள் பலரும் இந்தி மொழியை நிராகரிக்கின்றனர். ஏனென்றால் அம்மொழி வருங்காலத்திற்கு உதவாது என அவர்கள் நினைக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க :கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் உயிரிழப்பு; டெல்லியில் சோகம்

ABOUT THE AUTHOR

...view details