சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் ஐந்து ஆயிரத்து 828 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் தண்டையார்பேட்டையில் நான்கு ஆயிரத்து 743 பேருக்கும், தேனாம்பேட்டையில் நான்கு ஆயிரத்து 504, கோடம்பாக்கத்தில் மூன்று ஆயிரத்து 959 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையின் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,828 பேருக்கு கரோனா
சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் ஐந்து ஆயிரத்து 828 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்று கண்டறிய மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்களின் வீடுகளில் தொற்று குறித்து சோதனை நடத்தும் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அந்தந்த மண்டலங்களில் உள்ள ஊழியர்களுக்கு அதிகாரிகள் விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள் குப்பை உள்ளிட்ட கழிவுகளைக் கையாளும் முறைகள், பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். காய்ச்சல் கண்டறியப்படுவதற்காக நகரின் அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அருகாமையில் உள்ளவர்களுக்கு தொற்று தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, நகரில் முழுமையாக தொற்று கண்டறியும் பணிகள் மாநகராட்சியால் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.