இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேலூரில் தனியார் ஆய்வகம் ஆகிய இரண்டிற்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 891 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில், தமிழ்நாட்டில் இருந்த 5 ஆயிரத்து 514 பேருக்கும், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த தலா ஒருவர் என ஐந்து பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
இதன் மூலம் மேலும் புதிதாக 5 ஆயிரத்து 519 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 55 லட்சத்து 32 ஆயிரத்து 526 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில், 4 லட்சத்து 91 ஆயிரத்து 571 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இவர்களில், தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 47 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 6 ஆயிரத்து 6 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 422ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 77 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 231ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்து 879 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 631 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3491 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2029 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1983 பேரும், சேலம் மாவட்டத்தில் 1861 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1666 பேரும் ,திருப்பூர் மாவட்டத்தில் 1350 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1252 பேரும் ,திருநெல்வேலி மாவட்டத்தில் 1124 பேரும், வேலூர் மாவட்டத்தில் 1089 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு:
சென்னை -1,46,593
செங்கல்பட்டு -29,804
திருவள்ளூர் -27,728
கோயம்புத்தூர் -21,233
காஞ்சிபுரம் -19,099
மதுரை -15,169
கடலூர் -15,762
விருதுநகர் -13607
தேனி -13605
சேலம் -13,888
திருவண்ணாமலை -12,738
தூத்துக்குடி -12167
வேலூர் -12416