மதுரையில் கரோனா தொற்றால் 308 பேர் சிகிச்சைக்காக அனுமதி! - Corona special word
மதுரை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரையில் நேற்று (ஜூலை 5) மட்டும் 308 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூலை 5) மட்டும் ஒரே நாளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரையில் நேற்று(ஜூலை 5) மட்டும் 308 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூலை 5) மட்டும் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் தற்போது வரை 4 ஆயிரத்து 85 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், தியாகராஜர் பொறியியற் கல்லூரி ஆகியவற்றில் கரோனா சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன.
இதுவரை 1,048 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 975 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 62 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக நேற்று (ஜூலை 5) மட்டும் 308 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூலை 5) மட்டும் 54 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ஐந்து பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.