கொலை முயற்சி, கொலை, வழிப்பறி உள்ளிட்ட 40 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றாவாளியான கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ரவுடி அம்பேத்(எ)அம்பேத்கர் பிரபல தாதா தனசேகரனின் நெருங்கிய கூட்டாளியாவார். இவர் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். பிரபல கூலிப்படை கும்பலின் தலைவன் தென்னரசுவைக் கொன்ற வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாவார்.
தலைமறைவாக இருந்த பிரபல ரவடி கைது!
சென்னை: பிரபல ரவுடி அம்பேத் உட்பட அவரது கூட்டாளிகள் மூன்று பேரை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்னரசுவின் தம்பியான பாம் சரவணனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி அம்பேத், அவரது கூட்டாளிகள் இருவர் பல்லாவரம் அருகே தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற புளியந்தோப்பு ஆய்வாளர் ரவி தலைமையிலான காவல் துறையினர், பதுங்கியிருந்த ரவுடி அம்பேத் என்கிற அம்பேத்கர்(33), அவரது கூட்டாளிகளான புளியந்தோப்பைச் சேர்ந்த ஸ்டீபன்(33), குகன்(30) ஆகிய மூவரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எண்ணூரில் நடந்த ஒப்பந்ததாரர் ஜேம்ஸ் பால் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பிருப்பது குறிப்பிடத்தக்கது.