இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாக 1806ஆம் ஆண்டு, ஜூலை 10ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சியின் 214ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, வேலூர் கோட்டை எதிரே உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1806ஆம் ஆண்டு மதராஸ் படைக்கு தளபதியாக இருந்த சர் ஜான் கிரேடேக் என்பவர், வேலூர் கோட்டையிலிருந்த இந்திய சிப்பாய்களுக்குப் பல்வேறு அடக்கு முறைகளைக் கையாண்டார். அதில் குறிப்பாக, இந்திய சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணியக்கூடாது, சமய சின்னங்களை உடலில் அணியக் கூடாது, தாடி வைக்கக்கூடாது.
பசுந்தோலால் செய்யப்பட்ட தொப்பிகளை அணிய வேண்டும், துப்பாக்கிகளை பன்றியின் கொழுப்பின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளைக் கொண்டு வந்தார்.