தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பணியாள்களை ஏற்றிவந்த வேன் விபத்து: 19 பேர் படுகாயம்! - வேன் மோதிய விபத்தில் 19 பேர் படுகாயம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலைக்கு பணியாள்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.

பணியாட்களை ஏற்றிவந்த வேன் விபத்து: 19 பேர் படுகாயம்!
Thiruppathur van accident

By

Published : Jul 12, 2020, 2:39 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கஸ்பா பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலைக்கு பணிக்கும் செல்லும் பேர்ணாம்பட் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 14 பெண், 4 ஆண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது.

அந்த வேன், உமராபாத் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தங்களது இருசக்கர வாகனம், ஆட்டோவின் மூலம் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக 6 பேர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த உமராபாத் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.பி. திருமாவளவன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details