தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

1000 லிட்டர் கடத்தல் சாராயம் பறிமுதல்! - Counterfeit liquor

நாகை: காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு கடத்தி வரப்பட்ட 1000 லிட்டர் சாராயம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

1000L counterfeit liqour Seize In Pudhucherry
1000L counterfeit liqour Seize In Pudhucherry

By

Published : Jun 17, 2020, 12:42 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு; புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் அதிக அளவில் கடத்தப்படுவதாக, மயிலாடுதுறை உபகோட்ட தனிப்படை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிட்டப்பா மேல்நிலைப் பள்ளி அருகில் தனிப்படை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நிறுத்தாமல் வேகமாகச் சென்ற காரை விரட்டிச் சென்று, வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 20 சாக்கு மூட்டைகளில் 1000 லிட்டர் சாராயம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்த கடத்தல் சாராயம், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் கடத்தலில் ஈடுபட்ட பாபு கண்ணன்(27), சந்திரன்(20), ஆகிய இருவரையும் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:பொடி நடையாக கோவைக்குள் நுழையும் தொழிலாளர்களால் கரோனா பரவுகிறதா?

ABOUT THE AUTHOR

...view details