இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில் தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய பிறமொழிபேசும் சுகாதாரப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகள் தொலைபேசி மூலம் பெற்று வருகின்றனர்.
கரோனா கட்டுப்பாட்டு அறை: 1.47 லட்சம் பேர் பயன்!
சென்னை: கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் மூலம் இதுவரை 1.47 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்
இந்த கட்டுப்பாட்டு அறையின் கீழ் 10 பிரிவுகள் இயங்கி வருகின்றன. இம்மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொண்டு கரோனா குறித்த சந்தேகங்களையும், தடுப்பு நடவடிக்கை பற்றிய விவரங்களையும், சிகிச்சை முறைகளையும் தொலைபேசி வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒரு சுழற்சிக்கு இரண்டு நபர்கள் வீதம் மன நல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டு ஆலோகனைகளை வழங்கி வருகின்றனர்.
மனநல ஆலோசனைகளை விரும்பும் பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மன நல ஆலோசனைகளை பெறலாம். இந்த அவசரகால கட்டுப்பாட்டு அறையுடன் எட்டு கட்டணமில்லா தொலைபேசிகள் 044-29510400 / 044-29510500 / 044-29510300 / 044-46274446, கைபேசி : 9444340496 / 8754448477 என்ற எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், இந்த கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.