திருச்சியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - ரூ.35 லட்சம்
2019-02-23 09:39:05
திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்றிரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. அதில் பயணித்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது மலேசியாவைச் சேர்ந்த ஃபெலிஸியா தாஸ் விக்டர் என்ற பெண் 1,040 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை தனது உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஃபெலிஸியாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.