தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என் காதலியுடன் ஒரு முறை பேச விடுங்க...! கழுத்தில் கத்தியுடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்... - தற்கொலை முயற்சி

மேற்கு வங்கத்தில் தன் காதலியுடன் பேச அனுமதிக்குமாறு காவல் நிலையத்தின் முன்பு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

என் காதலியுடன் ஒரு முறை பேச விடுங்க...! - காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
என் காதலியுடன் ஒரு முறை பேச விடுங்க...! - காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

By

Published : Oct 15, 2022, 9:29 AM IST

மேற்கு வங்காளம் (புஜாலி): பிர்லாபூரைச் சேர்ந்த சேக் சொஹாயில்(22) என்பவரும் புஜாலியைச் சேர்ந்த ஒரு மைனர் சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்பின் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, இவர்களின் காதல் விவகாரம் இருவரது வீட்டாருக்கும் தெரியவந்தது.

அந்த இளைஞர் வீட்டில் எதிர்ப்பு கிளம்பிவில்லை. ஆனால் சிறுமியின் வீட்டார் புஜாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், சேக் சொஹாயிலும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் பிணையில் வெளி வந்தனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறுமியையும் அவரது தந்தையையும் புஜாலி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்தனர். அதன்படி அவர்களுக்கும் அங்கு சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த சொஹாயில், உடனே காவல் நிலையத்திற்கு விரைந்தார். தன் காதலியுடன் ஒரு முறையாவது தன்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் போலீசாரும், பெண் வீட்டாரும் மறுத்துள்ளனர். இதனால் அவர் கையில் வைத்திருந்த கத்தியை தனது கழுத்தில் வைத்துக்கொண்டு, பேச அனுமதிக்கவில்லையென்றால் தற்கொலைசெய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அவரது வீட்டில் கொண்டு விட்டனர். இருப்பினும் அவர் தனது காதலியுடன் பேச அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: பார்ட்டியில் சக தோழியை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details