புதுச்சேரி:தமிழ்நாடு, புதுச்சேரியில் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவிவருவதால், அதைத் தடுக்க ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த பால் வியாபாரம் செய்யும் ராஜ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த மூன்று கன்றுக்குட்டிகளை எடுத்துவந்து சட்டப்பேரவை வாயில் முன்பு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரிடம் கால்நடைத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து ராஜ்குமார் கூறும்போது, ”அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராததால் சுயமாக மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்துவருகிறேன்.