தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் காளையைத் திருட முயன்ற இளைஞர் அடித்துக்கொலை - மாடு திருட முயன்ற இளைஞர் கொலை

பிகார் மாநிலத்தில் காளையைத் திருட முயன்ற இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth-beaten-to-death-in-samastipur-bihar
youth-beaten-to-death-in-samastipur-bihar

By

Published : Aug 1, 2022, 6:18 PM IST

பாட்னா: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், விபூதிபூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை மூன்று இளைஞர்கள் சுக் லால் என்பவரது வீட்டில் காளையைத் திருட முயன்றனர். அப்போது ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கினர்.

இதில் இரண்டு பேர் தப்பியோடவே ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். இவரை ஊர் மக்கள் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதனால், அந்த இளைஞர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த இளைஞர் குறித்து யாருக்கும் தெரியாததால், சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்பட்டங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமஸ்திபூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஜபல்பூர் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details