தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சேலை அணிந்து செங்குத்து மலையை ஏறி சாதனைப் படைத்த 8 வயது சிறுமி! - சிறுமி மலையேற்றம்

மகாராஷ்டிராவின் கடினமான மலையான ஜிவ்தான் கோட்டையை, எட்டு வயது சிறுமி தன் சகோதரியுடன் சேர்ந்து பாரம்பரிய உடையான நவ்வாரி சேலை அணிந்து, ஏறி புதுமைல்கல் படைத்துள்ளார்.

சிறுமி
சிறுமி

By

Published : Jan 24, 2023, 10:37 PM IST

தானே:மகாராஷ்டிரா மாநிலம், தானேவைச் சேர்ந்த 8 வயது சிறுமி, தன் தந்தை மற்றும் சகோதரியின் உதவியுடன் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 100அடி உயரத்தில் உள்ள ஜிவ்தான் கோட்டையை மராட்டிய பாரம்பரியமான நவ்வாரி சேலை அணிந்து கொண்டு ஏறி புதுமைல்கல் படைத்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் தன் தந்தையுடன் சேர்ந்து மலையேற்று பயிற்சி மேற்கொண்ட சிறுமி கிரிஹிதா, முன்னதாக எவரெஸ்ட் மலை உச்சியை தொட்ட சிறுமி என்ற சாதனையையும் படைத்துள்ளார். கிரிஹிதா தன் சகோதரி ஹரிதாவுடன் இணைந்து கிட்டத்தட்ட 18 மலையேற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் கடினமான மலைகளில் ஒன்றான ஜிவ்தான் கோட்டையை தொழில்முறை மலையேற்று வீராங்கனைகளுக்கு சவால் விடும் வகையில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சகோதரிகள் ஏற்றி புதுமைல்கல் படைத்துள்ளனர். அதேநேரம் சகோதரிகள் இருவரும் மகாராஷ்டிராவின் பாரம்பரிய உடையான நவ்வாரி சேலை அணிந்து மலையேற்றம் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் ஃபைன்

ABOUT THE AUTHOR

...view details