தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புலிட்சர் விருது வென்ற காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண்!

ஊடகத்துறையில் உயர்ந்த விருதுகளில் ஒன்றாக கருதப்படும் விருதான புலிட்சர் விருது காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண் உள்பட நால்வருக்கு அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

By

Published : May 10, 2022, 7:19 PM IST

புலிட்சர் பரிசு வென்ற காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண்.
புலிட்சர் பரிசு வென்ற காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண்.

ஜம்மு காஷ்மீர்: புலிட்சர் விருது என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது இத்துறைகளுக்கான மிக உயரிய விருதாக கருதப்படுகின்றது. இது நியூயார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

சனா இர்சாத் மெட்டோ எனும் 28 வயதுடைய, காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண் புலிட்சர் விருதை வென்றார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நால்வருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. அதில் சனா இர்சாத் மெட்டோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் பரிசை பெற்றனர். கரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையைப்பதிவு செய்யும் புகைப்படங்களுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கப்பட்ட நால்வரில் ஒருவருவரான ’தனிஷ் சாஹிப்’ எனும் புகைப்பட கலைஞர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது நடைபெற்ற கலவரத்தைப் பதிவு செய்ய முயன்றபோது கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சனா இர்சாத் மெட்டோ, புலிட்சர் விருதினை வென்ற காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண்...

ஆரம்பம் தான்: இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடக, சனாவைத் தொடர்பு கொண்டு பேசியதபோது,”எனக்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது. இது வெறும் ஆரம்பம் தான். இன்னும் செய்வதற்கு நிறைய உள்ளன. கடவுளுக்கு நன்றி” எனக் கூறினார்.

மேலும் அவர், “என்னோடு சேர்ந்து தனிஷ் சாஹிப்பிற்கும் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அவர் இப்போது எங்களுடன் இல்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர் இப்பொழுது எங்களுடன் இருந்திருந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:நிர்மலா சீதாராமன் தலைமையில் அப் துருவ் விருது வழங்கும் விழா

ABOUT THE AUTHOR

...view details