சண்டிகர்:சலவை இயந்திரங்களின் தொழில்நுட்பம் எல்லா நேரத்திலும் அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் தண்ணீர் உபயோகத்தில் பெரிதாக எதுவும் மாற்றமடையவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், ஒரு ஸ்பூன் அழுக்கை அகற்ற சுமார் 100 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதுவும் கழிவு நீராக மாறி விடுகிறது.
மேலும் சோப்பு தூள் மற்றும் துணிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவங்களில் உள்ள ரசாயனங்கள் கலந்த நீர் அனைத்தும், வடிகால்களில் சேர்கிறது. அங்கிருந்து இறுதியாக குளங்களிலும் ஆறுகளிலும் இணைகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைகிறது.
இரு பயன்கள்: இந்நிலையில் சண்டிகரை சேர்ந்த '80 வாஷ்' (80 Wash) என்ற ஸ்டார்ட்அப் வடிவமைத்த ஒரு சலவை இயந்திரம், இதுபோன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் சரியான தீர்வை வழங்குகிறது. இது ரூபிள் குப்தா, நிதின் குமார் சலுஜா மற்றும் வரீந்தர் சிங் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது.
குறைந்த தண்ணீரில், அதிலும் ஒரு கோப்பை தண்ணீரில் ஐந்து துணிகளை துவைக்கிறார். அதுவும் சோப்பு இல்லாமல் இது செய்யப்படுகிறது. குறிப்பாக வெறும் 80 வினாடிகளில் துணி துவைக்கிறார். அழுக்கு கனமாக இருந்தால் இன்னும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
இவர்களின் புதுமையான சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட சலவை இயந்திரம் ஒருபுறம் தண்ணீரைச் சேமிப்பதோடு, மறுபுறம் சோப்பு ரசாயனங்கள் மாசுபடுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக பிரச்னைகள் தீரும் என்று கூறப்படுகிறது.