வாரணாசி: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (ஜூன்26) வாரணாசியில் இருந்து லக்னோவிற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். அப்போது, அவர் சென்ற ஹெலிகாப்டர் மீது ஒரு பறவை திடீரென மோதியுள்ளது. அதனை தொடர்ந்து, உடனே ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் சர்மா தெரிவித்துள்ளார்.
அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர் - இதுதான் காரணமா? - லக்னோ
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவசரமாக தரையிறக்கப்பட்ட யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர்- இதுதான் காரணமா?
சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சர் யோகி அங்கிருந்த சுற்றுலா இல்லத்திற்கு திரும்பினார். பின்னர் விமான நிலையத்திற்கு சென்று அரசு விமானத்தில் லக்னோவுக்கு புறப்பட்டார். அவர் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று (ஜூன் 25) சாமி தரிசனம் செய்ததோடு ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார்.
இதையும் படிங்க:ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு