தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் யோகி - புதிய அமைச்சரவை குறித்து மோடி, ஷா, நட்டாவிடம் ஆலோசனை - பிரதமர் மோடி யோகி சந்திப்பு

புதிய அமைச்சரவை மற்றும் பதவியேற்பு விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ள யோகி ஆதித்யநாத் டெல்லி சென்றுள்ளார்.

Yogi Adityanath
Yogi Adityanath

By

Published : Mar 14, 2022, 10:55 AM IST

அன்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து பாஜக தேர்தலை களம் கண்ட நிலையில், இந்த தேர்தல் வெற்றி மூலம் ஐந்தாண்டு ஆட்சிக்குப் பின் மீண்டும் தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியில் அமரும் நபர் என்ற சாதனையை யோகி ஆதித்யநாத் நிகழ்த்தவுள்ளார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நேற்று உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லி சென்ற ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது யோகியின் புதிய அமைச்சரவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின் இன்று பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் ஆகியோரையும் யோகி சந்தித்தார்.

இந்த இரு நாள் பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் யோகி சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. யோகியின் இந்த டெல்லி பயணத்தில் அமைச்சரவை பட்டியல் உறுதி செய்யப்பட்டு, முதலமைச்சர் பதவியேற்பு தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:முப்படை தலைமைகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details