தெலுங்கானா,மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எல்.பி மைதானத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறப்பு யோகா சிறப்பு நிகழ்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தெலுங்கானா ஆளுநர தமிழிசை, விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி, யோகாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் பரப்பிய பெருமை பிரதமர் மோடியை சேரும் எனறு கூறினார்.
வரும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, 100 நாட்களுக்கு முன் பல்வேறு இடங்களில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 75 நாடுகளில் யோகா விழா நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.