தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Wrestling: இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்.. அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்! - பஜ்ரங் பூனியா

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அளவில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம்
மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம்

By

Published : Jan 18, 2023, 11:01 PM IST

டெல்லி: இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிடட்ட 30-க்கும் மேற்பட்டோர் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏறத்தாழ 4 மணி நேரம் நடந்த போராட்டத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது வீரர், வீராங்கனைகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ்பூஷன் சரண் சிங் நீக்கப்பட வேண்டுமென மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பேசிய வினேஷ் போகத், தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளவதாகத் தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் இதுதொடர்பாக பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சர் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பஜ்ரங் புனியா, "எங்களது போராட்டம் அரசாங்கத்திற்கோ, இந்திய விளையாட்டு ஆணையத்துக்கோ எதிரானது அல்ல என்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரானது’’ என்றார். கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ்பூஷன் சரண் சிங் நீக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

அதேநேரம் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷண் சிங், "எந்த வீரரையாவது கூட்டமைப்பு துன்புறுத்தியது என கூற யாரேனும் முன்னே இருக்கிறார்களா’’ என கேட்டார். ’’பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அப்படி எதுவும் நடந்திருந்தால் தான் தூக்கில் தொங்க தயார்’’ என்றார். மேலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணைக்கு தயார் என்று கூறினார்.

இதையும் படிங்க:IND VS NZ 1st ODI: 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details