உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மனநல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மனநலத்துக்கு ஆதரவான முயற்சிகளை ஒன்று திரட்டுவதும் இதன் நேக்கம்.
உலகம் முழுவதும் மனநலம் பேணுதலை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக இந்த விழிப்புணர்வு நாளை உலக மனநல கூட்டமைப்பு 1992 ஆம் ஆண்டு கொண்டுவந்தது.
தன் வாழ்வை முழுமையாக வாழத்தெரிந்தவர்
இது குறித்து உலக சுகாதார மையத்தின் அறிக்கையில், “நல்ல மனநிலையில் உள்ளவர் தன் முழு ஆற்றலை உணர்பவராகவும், தினசரி பிரச்சினைகளை சமாளிக்கத் தெரிந்தவராகவும், உழைக்கத் தெரிந்தவராகவும், தான் வாழும் சமுதாயத்தில் முக்கிய பங்களிப்பவராகவும், மொத்தத்தில் தன் வாழ்வை முழுவதுமாக வாழத்தெரிந்தவராகவும் இருப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.