தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவையிலும் நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

Women's Reservation bill passed in Lok Sabha:நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறிய நிலையில், இன்று மாநிலங்களவையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

historic-womens-reservation-bill-passed-in-lok-sabha-now-faces-crucial-test-in-rajya-sabha-amid-obc-quota-debate
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் வெற்றி! மாநிலங்களவையில் விவாதங்களை எதிர்கொள்ள உள்ளன

By PTI

Published : Sep 21, 2023, 7:37 PM IST

Updated : Sep 21, 2023, 10:13 PM IST

டெல்லி: இந்தியாவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் முதல் மசோதாவாக மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையில் இந்த மசோதா குறித்த விவாதங்கள் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முன்னதாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கான 33 சதவீதம், அதாவது மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கும் மசோதாவிற்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பெறப்பட்டன. இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற 11 மணி நேரத்திற்கும் மேலான விவாதம் நடைபெற்றது.

இதனையடுத்து, தற்போது 171 பேர் இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும், ஒருவர் கூட மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியாவில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு பல்வேறு ஆண்டுகளாக விவாதங்களாக இருந்த நிலையில், தற்போது மக்களவை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளன. மகளிர் இடஒதுக்கீடு மசோதா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டு வருட விவாதங்கள் மற்றும் திருத்தங்கள் 2010 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், அதன் பின் இந்த மசோதா மக்களவையில் பரிசீலனைக்கு வரவில்லை.

தற்போது, நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் சிறப்பு கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆதரவாக பேச உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்த 14 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மசோதாவை விவாதிக்க உள்ளனர். இதில், பிற்படுத்தப்பட்டோர் (OBC) சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலின சமூகத்தையும் மற்றும் பழங்குடியின சமூகத்தையும் சேர்ந்த நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அவை செயல்பாட்டுக்கு வருவதற்கான காலம் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. 2027 தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயத்திற்கு மற்றும் அதன்பின் மக்கள் தொகை கணகெடுப்பு ஆகியவற்றிற்கு பின்பே மசோதா நடைமுறைபடுத்தப்படும். எனவே, 2029 வரை இந்த மசோதா நடைமுறைக்கு வர முடியாத நிலையுள்ளன.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி தனது உரையில் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் பெண்கள் அரசியல் பொறுப்பிற்கு வருவதற்காக காத்து இருக்கின்றனர். தற்போது மீண்டும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. என கூறினார். மேலும் OBC தொடர்பான துணை ஒதுக்கீட்டு மசோதாவை அவசரமாக அமல்படுத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இந்த மசோதாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் ஆகியவை இருப்பதால் இந்த மசோதா இன்னும் 7 முதல் 8 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த பொதுத் தேர்தலுக்கு பின் தொகுதி எல்லை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய இரண்டு பணிகளும் தொடங்கும் மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இதற்கு முன்பு நான்கு முறை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் இருந்துள்ளது. தற்போது கட்சிக்கு அப்பாற்பட்டு பெண்களுக்கு அதிகாரம் வழங்க ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது "X" பக்கத்தில் மகளிர்கான 33 சதவீத மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்ற வரலாற்றுச் சட்டம் பெண்களுக்கான அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Neet UG 2023: "நீட்" மதிப்பெண் மற்றும் பெர்சன்டைல்.. வித்தியாசம் என்ன?

Last Updated : Sep 21, 2023, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details