கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வருவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது.
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இவ்விவகாரம் தொடர்பாக பேசுகையில், ஹிஜாப் அணியும் வழக்கம் குறித்து குரானில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இஸ்லாமில் ஹிஜாப் என்பது கட்டாயம் இல்லை எனத் தெரிவித்தார்.
ஆரிஃப்பின் இந்த கருத்துக்கு பதில் தரும் விதமாக கர்நாடகா மாநில காங்கிரஸ் பிரமுகரும், எம்.எல்.ஏவுமான சமீர் அகமது, ஹிஜாப் என்றால் இஸ்லாமில் பர்தா என்று அர்த்தம். பெண்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னர், தங்கள் முகத்தை மூடி அழகை மறைத்துக்கொள்ள வேண்டும். உலகில் அதிக பாலியல் குற்றங்கள் இந்தியாவில் தான் காணப்படுகிறது.