டோராடூன்:ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகாவில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா. இவரை நேற்றிரவு பாம்பு கடித்துள்ளது. இதனால் அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனைக்கண்ட பெற்றோர் அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக தவறாக எண்ணிக்கொண்டு, பேயோட்ட அழைத்து சென்றுள்ளனர். அங்கு பிரியங்கா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
அதன்பின் பெற்றோர் அருகிலுள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியங்காவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை பாம்பு கடித்ததாகவும், காலதாமதமானதால் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனைக் கேட்ட பெற்றோர் தங்களது அறியாமையால் மகள் உயிர் பறிபோனதை உணர்ந்து மிகுந்த வருத்தமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.