மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் கடந்த வெள்ளிக்கிழமை 23 வயதான இளம்பெண் ஒருவர், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்பெண்ணுக்கு அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்தது. இவ்வழக்கில் காவல் துறையினர் மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
'இளம்பெண் தற்கொலை வழக்கை போலீஸ் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்' - தேவேந்திர பட்னாவிஸ் - புனேவில் 23 வயதான இளம்பெண் தற்கொலை வழக்கு
மும்பை: புனேவில் 23 வயதான இளம்பெண் தற்கொலை வழக்கை, காவல் துறையினர் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மூத்த பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மூத்த பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "இளம்பெண் தற்கொலை வழக்கில், காவல் துறையின் விசாரணை தீவிரமாக இல்லை. ஒருவிதமான அழுத்தத்தில் காவல் துறையினர் இருக்கிறார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இவ்வழக்கிற்குச் சம்பந்தமான 12 ஆடியோ கிளிப்புகள் கிடைத்துள்ளன. கிளிப்பில் உள்ள குரல் அனைவராலும் எளிதில் அடையாளம் காணமுடியும். காவல் துறையினரால் மறைக்கப்பட்டுள்ள ஆடியோவில், யாருடைய குரல் உள்ளது என்பதை வெளியிட வேண்டும். காவல் துறையினர் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.