லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பாபுகன்ச் மார்க்கெட்டில் நேற்று மாலை இரு பெண்களுக்கிடைய நடைபெற்ற சண்டை அப்பகுதி முழுவதும் பரபரப்பாகியது மட்டுமல்லாமல், விஷயம் காவல் துறை வரை சென்றுள்ளது.
மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை அதிகளவு கூட்டம் இருந்துள்ளது. இதனால், அங்கு நடக்க இடையூறாக இருந்த காரணத்தால் 19 வயது இளம்பெண் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்த 40 வயது பெண்மணியிடம் 'எக்ஸ்கியூஸ்மி ஆன்ட்டி'' எனக் கூறியுள்ளார். இளம்பெண்ணின் இந்த வார்த்தையைக் கேட்டு ஆத்திரமடைந்த பெண்மணி, இளம்பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டுள்ளார்.
இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கூடி வேடிக்கை பார்த்ததை அறியாமலும், அந்தப் பெண்மணி சண்டையிடுவதில் மும்மரமாக இருந்துள்ளார். பலர் இந்த சண்டையினை தனது செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர்.