லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் லூடோ சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் பணமில்லாததால் தன்னையே பணயமாக வைத்து தோற்ற சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பெண்ணின் கணவர் கூறுகையில், நானும் எனது மனைவியும் பிரதாப்கரில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தோம். இதனிடையே நான் செங்கல் சூளை வேலைக்காக ராஜஸ்தான் சென்று 6 மாதங்கள் பணிபுரிந்தேன். இதன் மூலம் வரும் வருமானத்தை மனைவிக்கு அனுப்பிவைத்தேன். இன்று(டிசம்பர் 4) வீடு திரும்பினேன். அப்போது நான் தங்கியிருந்த வீட்டில் மனைவி இல்லை.
லூடோவில் தன்னையே பணயமாக வைத்த இளம்பெண் - உத்தரப் பிரதேசம் லூடோ சூதாட்டம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லூடோ சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் பணமில்லாததால் தன்னையே பணயம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேடி பார்த்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்தார். அவரை என்னுடன் வருமாறு அழைத்தேன். ஆனால், வர மறுத்துவிட்டார். அப்போது, வீட்டின் உரிமையாளர் என்னிடம், உனது மனைவி தன்னைப் பணயம் வைத்து லூடோ விளையாட்டில் தோற்றதாகவும், அதனால் தன்னுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு, நான் அனுப்பிய பணத்தையும் என் மனைவி லூடோ விளையாட்டில் செலவழித்துள்ளார் என்பதையும் தெரிவித்தார். இதனால் உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளிக்க உள்ளேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காத்து வாக்குல 2 காதல்: ஒரே நபரை காதலித்து மணம் முடித்த இரட்டை சகோதரிகள்