தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலனுடன் சேர்ந்து மாமியார் கொலை.. மருமகள் உட்பட மூவர் கைது.. நடந்தது என்ன? - பெங்களூரு

கர்நாடகா மாநிலத்தில் காதலுன் சேர்ந்த மாமியாரை கொலை செய்துவிட்டு மாரடைப்பில் உயிரிழந்ததாக நாடகமாடிய மருமகள் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Woman killed mother in law along with her lover Three arrested including daughter in law
காதலனுடன் சேர்ந்து மாமியார் கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 6:16 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள் உட்பட 3 பேரை பைதரஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். அக்டோபர் 5-ஆம் தேதி லக்‌ஷம்மா (50) என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் ராஷ்மி, அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் ராஷ்மி, அவரது காதலர் அக்‌ஷய், நண்பர் புருஷோத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஷ்மிக்கு மஞ்சுநாத் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. ஆனால், திருமணத்திற்கு பின்னர் அவர்களது வீட்டில் வாடகைக்கு இருக்கும் அக்‌ஷய் என்பவருடன் ராஷ்மிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாமியார் லக்‌ஷம்மாவுக்கும் ராஷ்மிக்கும் வீட்டில் பண விஷயத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் வீட்டு கணக்கு வழக்கை தானே கவனிக்க வேண்டும் என்று ராஷ்மி விரும்பியதாக கூறப்படுகிறது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர்

இதனால் ராஷ்மி தனது காதலன் அக்‌ஷய்யுடன் சேர்ந்து தனது மாமியாரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த, அக்டோபர் 5-ஆம் தேதி தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், மாமியாருக்கு மாத்திரை கொடுத்த ராஷ்மி, அவரது காதலர் அக்‌ஷய் மற்றும் அக்‌ஷய் நண்பர் புருஷோத்தமன் ஆகியோருடன் சேர்ந்து மாமியாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் லக்‌ஷம்மா மாரடைப்பால் இறந்ததாக ராஷ்மி நாடகமாடியுள்ளார்.

அவர்களது குடியிருப்பின் 1-வது மாடியில் வசித்து வந்த ராகவேந்திரா என்பவர் இந்த சம்பவங்களால் சந்தேகமடைந்து அக்‌ஷயின் செல்போனை சோதனையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அக்‌ஷய் மற்றும் ராஷ்மி சாட்டிங்கில் லக்‌ஷம்மாவை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராகவேந்திரா, ராஷ்மியின் கணவர் மஞ்சுநாத்திடம் தெரிவித்து உள்ளார். மேலும் அவர்கள் சாட்டிங்கில் பேசிய ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளார். அதைப்ப்பார்த்து அதிர்ச்சியடைந்த மஞ்சுநாத் பைதரஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஷ்மி, அவரது காதலர் அக்‌ஷய் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த அக்‌ஷயின் நண்பர் புருஷோத்தம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி சிறப்பு தனிப்படையினரின் அதிரடி தேடுதல் வேட்டை.. 1,500 ரவுடிகளை பிடிக்க பட்டியல் தயார்!

ABOUT THE AUTHOR

...view details