தமிழ்நாடு

tamil nadu

சாலையோரம் நடந்த பிரசவம்.. கரும்பு வெட்டும் அரிவாளால் தொப்புள் கொடி அறுத்த உறவினர்கள்..

By

Published : Mar 5, 2023, 12:56 PM IST

மகாராஷ்டிராவில் மாநிலம் கோலாபூரில் சாலையோரத்தில் உள்ள கரும்புத்தோட்டத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

சாலையோரம் நடந்த பிரசவம்
சாலையோரம் நடந்த பிரசவம்

கோலாப்பூர்:மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பூதர்கர் தாலுகாவில் சாலையோரத்தில் உள்ள கரும்புத்தோட்டத்தில் பெண்ணு ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு, பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்த குழந்தையின் தொப்புள் கொடி கரும்பு வெட்டும் அரிவாளால் அறுக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கிரண் கேசு பால்வி என்ற பெண் மணி மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசித்து வருகிறார்.

நிறைமாத கரப்பிணியான இவர் நேற்று (மார்ச் 4) பூதர்கர் தாலுகாவில் உள்ள திருவாடாவில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள உறவினர்கள் 32 பேருடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். குண்டும் குழியுமான சாலையில் டிராக்டர் சென்றதால், இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொறுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

ஒருகட்டத்தில் வலி பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டிராக்டரை சாலையோரம் நிறுத்திய உறவினர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கர்ப்பிணியும் சுயநினைவை இழக்கும் நிலைக்கு சென்றார்.

இதையும் படிங்க:பாமக மகளிர் அணி தலைவி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - தகாத உறவால் நடந்த கொலை

இதனால் உறவினர்கள் அருகில் உள்ள கரும்புத்தோட்டத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இவர்களது தொப்புள் கொடி கரும்பு வெட்டும் அரிவாளால் அறுக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடா தாலுகா தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின் ஆம்புலன்ஸ் வந்ததால், அவர்கள் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோலாப்பூரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. இந்த பிரசவ சம்பவத்தின்போதும் சாலை மோசமாக இருந்ததன் காரணமாகவே ஆம்புலன்ஸ் வர தாமதமாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கோலாப்பூர் மாநகராட்சியிலேயே அரசு பொறியாளரின் தாயார் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழ்ந்த சம்பவம் நடந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் முக்கிய சாலைகளில் தற்காலிக பணிகளை மேற்கொண்டு சீர் செய்தன. இருப்பினும், பல்வேறு சாலைகள் பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து.. ஒருவர் பலி!

ABOUT THE AUTHOR

...view details