புவனேஷ்வர்:ஒடிசா மாநிலம் மஞ்சேஸ்வரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேஸ்வரை சேர்ந்த பெண் டிசம்பர் 12ஆம் தேதி போலீசாரிடம் பாலியல் வன்புணர்வு புகார் அளித்தார். அந்த புகாரில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் டிசம்பர் 11ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவரும் அவரது நண்பர்களான சுரேஷ், கோபி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும் கத்தி கூச்சலிட்டனர்.
பிறந்தநாள் விழாவில் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு - Woman raped in Bhubaneswar
ஒடிசா மாநிலத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது கூச்சலிட்டவர்களை கண்டித்த பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் நான் கூச்சலிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அப்போது அவர்கள் மூவரும் என்னை வீட்டிற்குள் இழுத்துச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தனர். அப்போது எனது அலறல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இதையடுத்து அவர்களில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். இதனிடையே போலீசாரிடம் புகார் அளித்தால், கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:வீடியோ: நொடியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு