ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிக்குள் இந்தியாவைச் சேர்ந்த ஜரீனா பி (36) என்ற பெண் தவறுதலாக நுழைந்துவிட்டார். அவரை பாகிஸ்தான் ராணுவம் தடுப்புக் காவலில் வைத்தது.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே சாகன் தா பாக் பகுதியில் இன்று (ஜன.28) ஜரீனாவை பாகிஸ்தான் ராணுவ அலுவலர்கள் இந்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.