உத்தரப் பிரதேசம்: ஜலூன் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் தேவி எனும் பெண் நேற்று முன் தினம் (ஜூலை.30) தனது வயல்வெளிக்கு சென்றபோது யமுனா நதியின் ஆற்றுப்படுகையில் தவறி விழுந்துள்ளார்.
அங்கிருந்து அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தன்னுடன் அடித்து வந்த மரக்கட்டை ஒன்றை பற்றிக் கொண்டு மிதந்தபடியே உதவிகோரி கத்தியபடி இருந்துள்ளார்.
தொடர்ந்து அவர் விழுந்த இடத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹமீர்பூர் எனும் பகுதியில் அவரது கதறலைக் கேட்ட படகுக்காரர்கள் சிலர் உடனடியாக அவரை மீட்டு, காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் ஜெய் தேவியை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தற்போது ஜெய் தேவி மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 16 மணி நேரம் மிதந்து தங்கள் குடும்பத்தை அவர் மீண்டும் வந்தடைந்தது கடவுளின் செயல் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா