ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ராஜாபூர் தாலுகா திர்மலாபூர் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(25) என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரது கணவர் பிரசாந்த், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த மருத்துவமனையில் ஜெயஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 24) அதிகாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.