டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
பெல்ஜியம் அணியுடனான அரையிறுதிப் போட்டி இன்று (ஜூலை 8) காலை நடைபெற்றது. இந்தப் போட்டியை, தான் பார்த்துக்கொண்டிருப்பதாகப் பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, தங்கப் பதக்க வாய்ப்பை நழுவவிட்டது. தோல்வியடைந்த இந்திய அணிக்கு ஆறுதல் தரும்விதமாக பிரதமர் ட்வீட் செய்தார்.
அதில், "வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜமான ஒன்று. ஆடவர் ஹாக்கி அணி தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது; அதுவே முக்கியமாகும். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகள். நமது வீரர்களை நினைத்து இந்தியா பெருமைகொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியா ஹாக்கி அணி போராடி தோல்வி