பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா, தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் புதிய அமைச்சரவையில் தனது கூட்டாளிகளுக்கு பதவிகளைப் பெற கடுமையாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், எடியூரப்பாவின் எதிரிகளுக்கு புதிய அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
எடியூரப்பா பதவி விலகியது உமேஷ் கத்தி மற்றும் முருகேஷ் நிரானி போன்ற அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கு கடுமையான வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில், பி.எஸ். எடியூரப்பாவின் நெருங்கிய கூட்டாளியான ரேணுகாச்சார்யாவும் கலந்து கொண்டடுள்ளார்.