உத்தரப் பிரதேசம்:கல்யாணப்பூர் ஷிவ்லி பகுதியைச் சேர்ந்த ரிஷப், தனது மனைவி சப்னாவுடன் வசித்து வந்தார். இவர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி, தனது நண்பர் மணீஷுடன் சகர்பூர் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டார்.
இதில், பலத்த காயமடைந்த அவர், ஸ்வரூப் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் 1ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், டிசம்பர் 3 ஆம் தேதி, ரிஷப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. தொடர்ந்து அவரை எல்எல்ஆர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வாட்ஸ்அப் சாட் மூலம் கொலையாளி அம்பலம்: தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து காவல் துறை இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக கண்காணிப்பு குழு விசாரணை நடத்தியபோது, தாக்குதல் நடந்த நாளில் அந்த இடத்தில் பல சந்தேகத்திற்கிடமான செல்போன் எண்கள் செயல்பட்டன. விசாரணையில் அந்த எண் ராஜூ மற்றும் சிட்டு என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.