டெல்லி, நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் உதவி ஜிஎஸ்டி ஆணையர் அமன் சிங்லா. இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், இவரது மனைவி நேற்று (ஏப்.07) திடீரென விஷம் குடித்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து இதுகுறித்த காவல்துறையினரின் விசாரணையில் அப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், அதனால் மனமுடைந்த அப்பெண் விஷம் குடித்ததாகவும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.