கடந்த ஜூன் 5 ஆம் தேதி இரவு, கிழக்கு டெல்லியில் உள்ள பாண்டவ் நகரில் இருக்கும் ராம்லீலா மைதானத்தின் முட்புதரில் மனித உடல் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஜூன் 7 மற்றும் ஜூன் 9 ஆகிய நாட்களிலும், மைதானைத்தை சுற்றி சில மனித உறுப்புகளின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொடூர சம்பவத்தின் பிண்ணனியில் உள்ள சிசிடிவி காட்சிகள்.. இதனையடுத்து விசாரணையை முடுக்கிய காவல்துறையினர், மைதானத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் பாண்டவ் நகரில் வசித்து வரும் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், “பாண்டவ் நகரில் வசித்து வந்தவர் அஞ்சன் தாஸ். இவரை அவரது மனைவியும் அவரது வளர்ப்பு மகனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வீட்டில் இருந்து பிரிட்ஜில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் துண்டுகளை சுற்றுப்புறத்தில் வீசி வந்துள்ளனர்” என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவமும் அரங்கேறி டெல்லியை பரபரப்பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃதாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர் கைது